தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியா,  மகாறம்பை குளம் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வீடொன்றிலிருந்து ஆணொருவரும், பெண்ணொருவரும் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டதாகவும், தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் இருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸாரும் சென்றுள்ளனர்.
விசாரணைகளை தொடர்ந்து சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்