உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஏ-9 வீதியில், கொக்காவில் 18ஆம் மைல் கல் பகுதியில் நேற்றிரவு 8.35 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹையேஸ் வாகனம் ஒன்று, கொக்காவில் பழைய முறிகண்டிக்கு அண்மித்த 18ஆம் போர் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இவ்விபத்தின் போது, ஹையேஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேர், சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை, மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, வாகனத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், பொலிஸாரினதும் வீதியால் பயணித்த பொதுமக்களினதும் உதவியுடனும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்