உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘டீக்கடை பெஞ்ச்’.

இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். இவர்களுடன் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ரா லட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வெங்கடேஸ்வர் ராவ், இசை – வி.ஸ்ரீசாய்தேவ், கலை – அன்பு, எடிட்டிங் – ஆனந்த், நடனம் – கிரீஷ், ஹபீப், தயாரிப்பு – வி.ஜே.ரெட்டி, எஸ்.செந்தில்குமார், என்.செந்தில் குமார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – ராம்ஷேவா.இது சென்டிமென்ட் கலந்த நகைச்சுவை படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகனுக்கு தெரியாமல் நாயகி தருஷி எடுத்துச்செல்கிறாள்.

இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க, இருவருக்கும் மோதல் உண்டாகிறது. இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகையாகிறான். இறுதியில் நட்பு வென்றதா? இல்லை காதல் வென்றதா? என்பதே மிகுதி கதை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்