உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க நாட்டின் பல்வேறு ரகசியங்களை கடந்த 2010 ஆம் ஆண்டு இணைய தளங்களில் வெளியிட்டு உலக அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய, அந்நாடு முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆஸ்திரேலியாவைச்சேர்ந்தவரான அசாஞ்சே மீது, 2012 -ம் ஆண்டு சுவீடனில் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், அசாஞ்சேகை தாகும் நிலை ஏற்பட்டதால் லண்டன் தப்பியோடினார். லண்டனில் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க முயற்சித்தார். அசாஞ்சேவுக்கு ஈகுவடார் தூதரகம் அடைக்கலம் கொடுத்தது. இதையடுத்து, 2012 ஆம் ஆண்டு முதல் ஈகுவடார் தூதரகத்தில் அசாஞ்சே உள்ளார்.

இந்நிலையில் ஈகுவடார் அரசு, அசாஞ்சேவிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈகுவடார் வெளியுறவு அமைச்சர் பிறப்பித்தார். இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்த அசாஞ்சே விரைவில் ஈகுவடார் செல்வார் என தெரிகிறது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்