உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குடியேற்றவாசிகளை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்திற்கு மன்னிப்பு கோரக் வேண்டும் என ஆபிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ட்ரம்ப், அமெரிக்காவில் குடியேறிய குடியேற்றவாசிகளை கடுமையான வசைச் சொற்கள் கொண்டு திட்டியிருந்தாரென தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதிலும் ஹெய்ட்டி, எல் சல்வடோர் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிலிருந்து வந்தவர்களையே அவர் சாடியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

வெள்ளை மாளிகையில் அமைந்துள்ள ஓவல் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மிகவும் அசிங்கமான நாடுகளிலிருந்து இவர்கள் ஏன் வரவேண்டும், அசிங்கமான நாடுகளிலிருந்து குடியேறியவர்களை நாம் இங்கு ஏன் வைத்திருக்கின்றோம் என்ற வகையில் அவர் தனது விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக  வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்திக்கு வெள்ளை மாளிகை உடனடியாக மறுப்பு செய்தி எவையும் வெளியிடவில்லை.

எனினும் நேற்றைய தினம், தான் குடியேற்றவாசிகளை இவ்வாறு திட்டவில்லை எனவும், அசிங்கமான நாடுகளிலிலிருந்து வந்தவர்கள் என்று தாம் கூறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்