உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையின் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு இந்திய அரசு சுமார் 283 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கி உள்ளது.
இலங்கையின் வடக்கு பகுதியில் காங்கேசன்துறை துறைமுகம் உள்ளது. இலங்கையின் உள்நாட்டு போரில் இந்தத் துறைமுகம் முழுவதும் சேதம் அடைந்தது. இதையடுத்து இந்த துறைமுகத்தை மறுசீரமைத்துத் தர நிதி உதவி செய்வதாக இந்தியா அரசு இலங்கை அரசுக்கு ஒப்புக் கொண்டது.

இதையடுத்து ஆறு கட்டமாக மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை நான்கு கட்ட பணிகள் முடிந்த நிலையில் கடைசி இரண்டு கட்ட பணிகளுக்காக 283 கோடி ரூபாயை இந்திய அரசு வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்