உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த புகையிரதம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக வந்துகொண்டிருந்த போது புகையிரதத்தின் பின்பகுதியில் உள்ள இயந்திர பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கோளாறு உடனடியாக கண்டறியப்பட்டதுடன் புகையிரதம் சடுதியாக நிறுத்தப்பட்டு, பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், பயணிகள் பேருந்துகளில் யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்துடன், தீ அணைப்பு படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு, தொழில்நுட்ப கோளாறு சீராக்கப்பட்டு, புகையிரதம் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்