உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதிகளுக்கும், கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து சாரதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் சாவகச்சேரி பஸ் நிலையத்தில் சந்தித்துக் கொண்டன.

இதன் பின்னர் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து சாரதி தனியார் பேருந்தை மோதுவது போன்று பேருந்தை எடுத்துள்ளார். இதன்போது தனியார் பேருந்து நடத்துனர் இ.போ.ச பேருந்து நடத்துனரை பேசியுள்ளார்.

அப்போது பேருந்து நடத்துனர் தனியார் பேருந்து நடத்துனரை தாக்க வந்ததாகவும் தனது தற்பாதுகாப்பிற்காக இ.போ.ச நடத்துனரை தாக்கியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தவுடன் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸர் தனியார் பேருந்தை கொடிகாமத்தில் பயணிகளை இறக்கி விட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி உத்தரவிட்டனர்.

இ.போ.ச பஸ் நடத்துனரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்ற அதேவேளை பயணிகளை யாழ்ப்பாணத்தில் இறக்கி விட்டு பேருந்துடன் பொலிஸ் நிலையம் வரும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இப்போது இரு பேருந்து நடத்துனர்களும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்