உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கஜகஸ்தான் வடமேற்கு பகுதியில் இன்று(18.01.2018) காலை பயணிகள் பஸ் ஒன்று தீடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், சுமார் 52 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அவரச சேவை அமைச்சு அறிவித்துள்ளது.

கஜகஸ்தான் அக்டோபே மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலையில், இன்று காலை, உள்ளூர் நேரப்படி சுமார் 10.30 மணியளவில், இரு சாரதிகள் உட்பட 57 பேருடன் பயணித்த மேற்படி பேருந்தானது, தீடிரென தீப்பிடித்ததில் சம்பவ இடத்திலேயே 52 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் அந்நாட்டு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தீ விபத்தில் பலியானவர்கள் உஸ்பெக் குடியேற்ற தொழிலாளர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்