உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


துருக்கியில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து மேற்குப் பகுதியிலுள்ள புர்சா நகருக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானது.

இதில் 11 பேர் பலியாகியுள்ள நிலையில் 46 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை பொலிசார் விசாரித்து வருகின்றனர். துருக்கியைப் பொறுத்தவரை அங்கு சாலை விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. 2016ம் ஆண்டு மட்டும் துருக்கியில் சாலை விபத்தில் 7,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்