உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஊரெழு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 25 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்