உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியர், லேரி நாசருக்கு 175 ஆண்டுகள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையை தொடர்ந்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் பிரதான வைத்தியராக கடமையாற்றி வந்த லேரி, மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவரிடம் சிகிச்சைக்காக வந்த வீராங்கணைகள் மீது பாலியல் துஷ்பிரயோகங்களை முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 100 க்கும் அதிகமான பெண்களிடம் இவர் தவறாக நடந்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இந்த விசாரணையின் போது, லேரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 175 வருடம், சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குழந்தைகள் தொடர்பான ஆபாச காணொளிகள் வைத்திருந்தாக ஏற்கனவே லேரிககு 60 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடததக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்