உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ரஷியாவின் விமானத் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளோட்டத்தின் போது, விமானம் கீழே விழுந்து தீப் பற்றியதில் அதில் பயணித்த அறுவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரஷியாவில் எவாரோனேஷ் என்ற இடத்தில் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மியான்மர் நாட்டுக்காக 2 விமானங்கள் வடிவமைக்கப் பட்டு அவற்றின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இயக்கிப் பார்க்கப்பட்ட அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 4 பேரும், மியான்மரை சேர்ந்த 2பேரும் இருந்தனர். விண்ணில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் நிலை தடுமாறிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் இருந்த 6 பேரும் அதே இடத்தில் பலியாகினர். இந்த விமான சோதனை ஓட்டம் கடந்த 2 வாரங்கள் நடந்தது. ஆயினும், இத்தகைய விபத்து முதல்முறையாகச் சம்பவித்துள்ளது என்று அந்நிறுவனம் கூறுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்