உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றுக்கு தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் உள்ள மக்களில் ஒரு வகையினர் அங்குள்ள கோவிலுக்குள் செல்லவும், ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதபடி தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமுத்திரக்கனி, அனைத்து மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்றும் ஊர் மத்தியில் அறிவிக்கிறார்.

அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சில குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருந்தும் சமுத்திரக்கனியின் அறிவிப்பால் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி உயிரிழந்துவிடுகிறார்.

அதேநேரத்தில் அந்த ஊரின் முக்கிய நபரான வேல ராமமூர்த்தியின் தம்பியும், பக்கத்து ஊரில் இருக்கும் மைம் கோபியின் அண்ணனும் உயிரிழந்து விடுகின்றனர்.

இதையடுத்து கணவனை இழந்து தவிக்கும் சமுத்திரக்கனியின் மனைவி, அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் அவரது சிறுவயது மகனான சண்முகபாண்டியனை அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்றுவிடுகிறார்.

பின்னர் சண்முகப்பாண்டியனுக்கு பெண் பார்ப்பதற்காக 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர்.

அங்கு ஜாதி பிரச்சனையால் நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த வேண்டும், தனது அப்பா சமுத்திரக்கனியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் சண்முகபாண்டியன்.

கடைசியில் சமுத்திரக்கனியை கொன்றவர்களை சண்முகபாண்டியன் பழிவாங்கினாரா? அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.இயக்கம்:முத்தையா.இசை:சந்தோஷ் தயாநிதி,ஓளிப்பதிவு
முத்தையா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்