உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வேர்க் கடலை (கச்சான்)வடை

தேவையான பொருட்கள் :

பச்சை வேர்க்கடலை(கச்சான்) – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 3,
பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு,
வெங்காயம் – ஒன்று,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வேர்க்கடலையை(கச்சான்) ஒரு மணி நேரம் ஊறவிடவும்.வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வேர்க்கடலை(கச்சான்) நன்றாக ஊறியதும் சிறிதளவு வேர்க்கடலையை தனியாக எடுத்து வைத்து மீதமுள்ள வேர்கடலையுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவுடன் நறுக்கிய வேர்க்கடலை, வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்