உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்காங்கேசந்துறை கடற் பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் (6) மாலை சந்தேகத்திற்குறிய படகு ஒன்று தொடர்பாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இருவரும் தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

100 கிராம் நிறையுடைய 37 தங்கக் கட்டிகளை மறைத்து குறித்த படகில் கடத்திச் சென்று கொண்டிருக்கும் போதே கடற்படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மீட்கபட்ட தங்கத்தின் பெறுமதி 2 கோடி ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அப்படகில் மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் தெல்லிப்பளையில் உள்ள சுங்க திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்