உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கூட்டாக இணைந்து போர்க் கப்பல்களை கட்டமைக்க வேண்டும் என்ற பிரிட்டனின் கோரிக்கையை கனடாவின் பழமைவாத கட்சியின் அரசு நிராகரித்தது.

கனடிய அரசின் முடிவு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் மாக்கேவின் செய்தித் தொடர்பாளர் ஜேபாக்ஸ்டன் கூறுகையில்,“பிரிட்டனின் கூட்டு முயற்சியுடன் நமது புதிய போர்க் கப்பல் கட்டமைப்பை தொடரவில்லை” என கூறினார்.

ஒட்டாவில் பிரிட்டனின் தலைமை தூதரக ஆண்ட்ரூ போகாக் கூறுகையில்,”கனடாவும், பிரிட்டனும் இணைந்து புதிய போர்க்கப்பல்களை கட்டமைக்கலாம். இதனால் இரு நாட்டு பொது மக்களின் டொலர்கள் செலவினத்தை குறைக்க முடியும்” என்றார்.

பிரிட்டன் தூதரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கனடிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் பதில் அளித்திருந்தார். நாம் நிதி கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்கிறோம். எனவே பாதுகாப்புத் துறை செலவுகளுக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றார்.

எனவே இரு நாடுகளும் கூட்டாக இணைந்து போர்க் கப்பல்களை உருவாக்க வேண்டும் என்றும் பிரிட்டன் தூதர் ஆண்ட்ரூ கோரி இருந்தார். கடந்த மாதம் பிரிட்டன் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற செயலாளர் ஜெரால்டு ஹோவர்த் பொதுச்சபையில் கூறியதாவது: புதிய போர்க் கப்பல் கட்டமைக்கும் திட்டத்தில் கனடாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

அந்த அறிவிப்பு குறித்து கனடாவின் பழமைவாத அரசு உடனடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால் கனடிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் பிரிட்டனுடன் போர்க்கப்பல் கட்டமைக்கும் திட்டம் இல்லை என தெளிவுபட கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்