உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சி மற்றும் அங்குள்ள போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். அங்கு போராளிகள் பிடியில் இருக்கும் முக்கிய பகுதிகளை கைப்பற்றவும் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் பழங்கால தலைநகராக இருந்த கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட எர்பின் மற்றும் ஜிஸ்ரின் நகரங்களில் போராளிகள் வசமுள்ள பகுதிகள் மீது சிரியா அரசின் தரைப்படை மற்றும் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் கடந்த ஒருவார காலமாக உச்சகட்ட தாக்குதல் நடத்தி வருகின்றன.

பள்ளிகள் மற்றும் மார்கெட் பகுதிகளில் அரசுப் படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 200 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கவனித்துவரும் பிரிட்டன் நாட்டு கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, நேற்று ஒரேநாளில் பள்ளிக்கு அருகாமையில் நடந்த தாக்குதலில் 15 குழந்தைகள் உள்பட 58 பேரும், மார்கெட் பகுதியில் 9 குழந்தைகள் உள்பட 21 பேரும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்