உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ரஜினியின் அரசியல் கொள்கையில் காவி நிறம் இருக்குமானால், அவருடன் கூட்டணி அமைக்க மாட்டேன்,” என நடிகர் கமல் கூறியுள்ளார்.அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த, வருடாந்திர இந்திய மாநாட்டில், நேற்று கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு வேட்டி அணிந்து வந்த கமல், செய்தியாளர் பர்காதத் கேட்ட கேள்விகளுக்கு, பதில் அளிக்கையிலேயே மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், கமல் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
என் அரசியல் பயணத்தை, கிராமங்களில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளேன். காந்தி கூறியது போல, தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்குவதே என் நோக்கம். இதன் ஆரம்பமாக, தமிழக கிராமம் ஒன்றை தத்தெடுக்க உள்ளேன்.

அதன் பின், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதை உலகின் தலைசிறந்த கிராமமாக உருவாக்கிக் காட்டுவேன்.ரஜினி தொடங்க இருக்கும் கட்சியின் கொள்கை, எங்கள் கொள்கைகளுடன் ஒத்துப்போனால், அவருடன் கூட்டணி அமைப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை.

ஆனால், மதரீதியான அவரது நம்பிக்கைகளுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அவரது அரசியல் கொள்கையில் காவி நிறம் இல்லை என நம்புகிறேன்; அப்படி இருக்குமானால், அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.

யாருடன் கூட்டணி வைத்தாலும், அது நிச்சயம், தேர்தலுக்கு பிறகான கூட்டணியாக இருக்காது. காரணம், தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே ஆட்சியில் அமர்வேன். கிடைக்கவில்லை என்றால், எதிர்க்கட்சியாக செயல்பட்டு, அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பேன். நான் அரசியல் கட்சி தொடங்குவதே, மக்களுடன் பயணிக்கத் தானே தவிர, அரசியல்வாதிகளுடன் பயணிப்பதற்காக அல்ல. என அவர் கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்