உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்ட பொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களை தயாரித்துள்ள படம் நிறுவனம் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்.
இதன் தயாரிப்பாளர் மணிவாசகம் இந்த படங்கள் அனைத்தையும் இயக்கினார். அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.இதன் சார்பில், மணிவாசகத்தின் மகன் காந்திமணி வாசகம் தயாரித்து, இயக்கும் படம்.

‘களவாணி மாப்பிள்ளை’.தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை – என்.ஆர்.ரகுநந்தன், கலை – மாயாபாண்டி, எடிட்டிங் – பி.கே, நடனம் – தினேஷ், ஸ்டண்ட் – திலீப் சுப்ப ராயன், தயாரிப்பு – ராஜேஸ்வரி மணி வாசகம். கதை, திரைக்கதை, இயக்கம் காந்தி மணிவாசகம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்