உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நடிகர் கமலுக்கு முன், தன் கட்சி பெயரை அறிவிப்பது குறித்து ஆலோசிக்க, ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அவசர கூட்டத்துக்கு, நடிகர் ரஜினி ஏற்பாடு செய்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து, இன்று சென்னை திரும்பும், நடிகர் கமல், ஓரிரு நாட்களில், டில்லி சென்று, புதுக்கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய உள்ளார்.

வரும், 21ல், கட்சி பெயரை, மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவிக்கவுள்ளார்.
அமெரிக்கா சென்றிருந்த கமல், அங்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘ரஜினியுடன் நட்பு வேறு;அரசியல் வேறு. அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை’ என்றார்.

ஆனால், ரஜினியோ, ‘கமலுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்லும்’ என்றார்.’கமலும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்’ என, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர், நக்மா கூறியுள்ளார்.

இந்நிலையில், கமலுக்கு முன், ரஜினி, தன் கட்சியின் பெயரை வெளியிட வேண்டும் என, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
கமல், தன் கட்சி பெயரை அறிவித்து விட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்றால், அவரது கட்சியில், அதிக இளைஞர்கள் சேர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, கமல் நடத்தி வந்த, ‘மையம்’ என்ற இணையதளம், ‘நாளை நமதே’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் ஆதரவு, கமலுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. எனவே, கமல் கட்சிக்கு முன், ரஜினி கட்சியை துவக்கினால், அவருக்கு பின்னால், இளைஞர்கள் அணிவகுக்கக் கூடும்.

எனவே, கமலுக்கு முன் ரஜினி, தன் கட்சி பெயரை அறிவிப்பது குறித்து ஆலோசிக்க, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை அழைத்துள்ளார். சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் வரை, ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என அவர்கள் கூறினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்