உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிவராத்திரிக்கு சென்று வந்த வாகனம் வவுனியாவில் விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.திருக்கேதீஸ்வரத்தில் இருந்து சிவராத்திரி வழிபாடுகளை முடித்து திரும்பிக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து பற்றி தெரியவருவதாவது, திருக்கேதீஸ்வரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் வவுனியாவில் இருந்து கற்பகபுரம் நோக்கி சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி, குழந்தை உட்பட அறுவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்