உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



முட்டைக்கோஸ் (கோவா ) பக்கோடா

தேவையான பொருட்கள் :

முட்டைக்கோஸ் (கோவா )- 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
கடலை மா – ஒரு கப்
அரிசி மா – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முட்டைக்கோஸ்,(கோவா ) வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.பச்சைமிளகாய், வெட்டிக்கொள்ளவும்.பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மா, அரிசி மா போட்டு அதனுடன் நறுக்கிய முட்டைக் கோஸ்,(கோவா ) வெங்காயம், பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.

எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணெயை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்