Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு நைஜீரியாவில், மயடுகுரி என்ற இடத்தில் இருந்து 20கிமீ தூரத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில், 3 தற்கொலைப்படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்த இடத்தில் தாக்குதல் நடைபெற்றதால், 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ராணுவ வீரர் ஒருவரும் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தற்போது 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும், நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளனர்.

இந்த கோர சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்