உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்எகிப்தில் அதிபருக்கு எதிரான கலவரத்தின் போது அரசு ரகசிய ஆவணங்களை அழித்து விட்டதாக 47 பாதுகாப்பு உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எகிப்தில் அதிபர் ஹோஸினி முபாரக்கிற்கு எதிராக 17 நாட்கள் பொது மக்கள் கிளர்ச்சி செய்தனர். மக்களின் எதிர்ப்பிற்கு பணிந்த அதிபர் பதவி விலகினார்.

அரசுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது 11 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. அப்போது உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பணிப்பிரிவைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலவரத்தின் போது நடந்த தொலைபேசி ஒட்டுகேட்பு, குடிமக்கள் கண்காணிப்பு மற்றும் அவசரகால சட்டம் குறித்த ரகசிய ஆவணங்கள் காணமால் போயின.

இது குறித்த விசார‌ணையில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்புப் படைப்பிரிவி‌னைச் சேர்ந்த 47 பாதுகாப்புப் படை அதிகாரிகள் தான் அரசின் சட்ட திட்டங்களை மீறி பதவியினை தவறாக பயன்படுத்தி ஆவணங்களை தீயிட்டு அழித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன் பேரின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்