உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்55 இலட்சம் ரூபா பெறுமதியான 10 தங்க கட்டிகளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று பிற்பகல் SG 004 எனும் இந்திய தனியார் விமான சேவை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மதுரை நோக்கி பயணிக்க இருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

48, 52, 52 வயதுடைய குறித்த சந்தேகநபர்களால் கொண்டு வரப்பட்ட கைப்பையை கதிர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மேற்கொண்ட சோதனையில் சுமார் 100 கிராம் கொண்ட 10 தங்கக் கட்டிகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த நிறை 916.25 கிராம் எனவும் அதன் பெறுமதி ரூபா 5,497,500 எனவும் கணக்கிடப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்