உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஜப்பான் நாட்டின் ஹான்சூ தீவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் உள்ள ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான ஹான்சூ தீவில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹான்சூ தீவில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 78 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 6.2 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று இரவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்