உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியில் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 7.5 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சீரானது. தீவிலுள்ள சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் சேத விவரங்கள் வெளியாகவில்லை.

மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்