Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னம் முழு அள­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­பதே பிரித்தானியாவின் நிலைப்­பாடு என்று பிரித்தானியாவின் ஆசிய, பசு­பிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சர் மார்க் பீல்ட் தெரி­வித்­தார். பிரிட்­டன் எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்கி பொக்ஸ்க்­ரொப்ட், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்தை இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றதா என்று நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார்.

இதற்­குப் பதி­ல­ளித்த, ஆசிய, பசு­பிக் விவ­கா­ரங்­க­ ளுக்­கான அமைச்­சர் மார்க் பீல்ட், பொலிஸ் மறு­சீ­ர­மைப்பு, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தல், சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்­பு­தல் உள்­ளிட்ட பல்­வேறு கார­ணி­களை முன்­னி­லைப்­ப­டுத்தி மூன்­றாண்டுத் திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் இலங்­கைக்கு 6.6 மில்­லி­யன் ஸ்ரேலிங் பவுண்ஸ் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் நிலை­கா­ல­மாறு நீதிப்­பொறி முறைமை, நம்­ப­க­மான பொறுப்­பு­கூ­று­தல் பொறி­மு­றைமை, பொது­மக்­க­ளின் காணி­களை இரா­ணு­வத்­தி­னர் மீள­வும் ஒப்­ப­டைத்­தல் போன்ற விட­யங்­கள் குறித்து அண்­மை­யில் இலங்­கைக்கு சென்­றி­ருந்த போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம் முழு அள­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­பதே பிரித்தானியாவின் நிலைப்­பாடு என்­றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்