Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்பில் கவலை தெரிவித்திருக்கும் அமெரிக்கா, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாத்து அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

நாட்டின் அமைதியான சகவாழ்வுக்கு சட்ட ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன அத்தியாவசியமாகும். மதம் சார்பான பிரிவினைவாத வன்முறை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் மத ரீதியான சிறுபான்மையினரையும் அவர்களது வழிபாட்டு தலங்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்கும் அதேநேரம், தற்போது நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது முக்கியமாகும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்