உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்திக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்கவிருப்பதாக டிரம்ப் தற்போது தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாக அவரைச் சந்தித்த தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்கள் நீடித்த தொடர்ச்சியான பரஸ்பர அச்சுறுத்தல்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகப் அனைவராலும் கருதப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய் யங், “வரும் மே மாதவாக்கில் டிரம்ப் வடகொரிய ஜனாதிபதியை நேரில் சந்திப்பார்,” என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் பியாங்யாங்கில் கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரிய குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.

“வடகொரியா ஜனாதிபதி உடனான சந்திப்பு குறித்து நாங்கள் டிரம்ப் இடம் விவரித்தோம். கிம் அணு ஆயுத நீக்கம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பதையும் தெரிவித்தோம்,” என்று சங் தெரிவித்தார்.

இனிமேல் வடகொரியா அணு ஆயுத சோதனை எதிலும் ஈடுபடாது என்று எங்களிடம் கிம் உறுதியளித்தார்,” என்று கூறிய சங் “நிரந்தர அணு ஆயுத நீக்கம் செய்வதற்காக வரும் மே மாதம் கிம் ஜாங் உன் உடன் நேரடிச் சந்திப்பு நடத்தவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்,” என்று கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்