உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர்.

பின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு அவர்களை விசாரிக்கிறார்.

அப்போது அவர்கள் சாதன்யாவை கடத்தி வந்தது தெரிகிறது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் அங்கு வர, தன்ஷிகா அங்கிருந்து தப்ப முயற்சிக்கிறார்.

அப்போது தான் தன்ஷிகா உண்மையான போலீஸ் இல்லை என்பது அவிஷேக், டேனியலுக்கு தெரிய வருகிறது.

தன்ஷிகா போலீசில் இருந்து தப்பிக்கும் நிலையில், சம்பத் தனது அப்பா இல்லை என்ற உண்மையை பேபி சாதன்யா கூறுகிறாள். கடைசியில் சாதன்யா யார்? சாதன்யாவை நாயகன் சம்பத்திடம் ஒப்படைத்தாரா? தன்ஷிகா யார்? தன்ஷிகாவை ஏன் போலீஸ் துரத்தியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.இயக்குனர்
எஸ்.கல்யாண்,இசை.தீபன்.பி,ஓளிப்பதிவு.ஆர்.பவண்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்