உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் காணாமல்போனதாக தெரிவிக்கப்படும் பிரபல வர்த்தகர் ஒருவர் நேற்று (11) மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு- காத்தான்குடி நகரில் வர்த்தக பணியில் ஈடுபட்டு வந்த பிரபல வர்த்தகர் ஒருவர் சனிக்கிழமை (10) மாலை முதல் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று (11) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காத்தான்குடி மூன்றை சேர்ந்த 36 வயதுடைய எ.எல்.எம் முபாறக் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

காத்தான்குடி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த அவர் நேற்று (11) மாலை கல்லடி ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி நொச்சிமுனை பகுதியில் பாதணிகள் தயாரிக்கும் தொழில்சாலையினை நடத்தி செல்லும் உரிமையாளர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்