உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் விமானியை சக ஆண் விமானி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அலாஸ்கா விமான நிலையத்தில் பெட்டி பீனா என்ற பெண் கடந்த ஜுன் மாதம் ஒப்பந்தம் முறையில் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு சக ஆண் விமானியுடன் ஒன்றாக மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, அந்த பெண் விமானி சக ஆண் விமானியுடன் விமானத்தில் ஒன்றாக பயணித்தார். அப்போது அந்த ஆண் விமானி அவருக்கு மயக்க மருந்து கலந்த மதுவை கொடுத்துள்ளார். அந்த மதுவை குடித்த அவர் விமானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மயங்கி விழுந்த அவரை ஆண் விமானி தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அவருக்கு நினைவு திரும்பிய போது அடித்து கொடுமையும் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் விமானி 6 மாத காலமாக தான் பணிபுரியம் விமான நிறுவனத்தில் புகார் தெரிவித்து வந்துள்ளார். ஆனால், அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண் விமானிகளுக்கு இது போன்ற பாலியல் தொல்லைகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்