உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிரு ந்த பெண்கள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒரு வர் வாளால் வெட்டியதில் 3 பெண்கள் யாழ்.போத னா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது,
செம்மணி நாயண்மார்கட்டு பகுதியில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வாளாள் வெட்டியுள்ளான்.

வெய்யில் உகந்த பிள்ளையார்கோயில் இடம்பெற்ற வழிபாட்டிற்கு சென்றுவிட்டு வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த பெண்கள் மீதே இவ்வாறு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். காயமடைந்த பெண்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏன் எதற்காக வாளாள்வெட்னார் என தெரியவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.இதில் ஒரு பெண்மீது கழுத்திலும் கைகளிலும் பலத்த வெட்டுக்காயங்கள் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7.00 மணிபோல் நடந்து வந்து கொண்டிருந்த போது வீதியில் நின்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் இவர்களை துரத்தி துரத்தி வாளாள்வெட்டியதாக பொலிஸார் கூறினர்.

கைதான நபரை இன்று (23) யாழ் போதனா வைத்தியசாலையின் மனநல வைத்தியரிடம் ஆஜர்படுத்தி சட்டவைத்திய நடவடிக்கைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்