உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரெஸ்பய் பகுதியில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள ரபாவுல் என்ற இடத்தின் தென்மேற்கே சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 68 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாகவும், ரிக்டர் அளவுக்கோலில் 6.8 அலகுகளாக பதிவானதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

பின்னர், அமெரிக்க புவியியல்சார் ஆய்வு மையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, பூமிக்கு அடியில் சுமார் 60 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்