உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சாரா-இ-ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப்(57).

மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்த அய்யூப், நேற்று மனைவி வெளியே சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை கோடரியால் சரமாரியாக தாக்கினார்.

மனதை பதைபதைக்க வைக்கும் இந்த கொடூர தாக்குதலில் அலி ஷான்(14), நாடியா(10), இஷா(9) மற்றும் ஐமென்(8) ஆகிய 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தனர்.

குழந்தைகளின் கதறல் ஓசையை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் முஹம்மது அயூபை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த வாரம் லாகூர் அருகேயுள்ள அஸ்கரி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் தனது 3 குழந்தைகளின் கழுத்தை நெரித்து ஒரு பெண் கொன்ற அதிர்ச்சி விலகும் முன்னரே லாகூர் நகரில் இருந்து சுமார் 225 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காம்பி மேரா கிராமத்தில் 4 குழந்தைகளையும் தந்தையே கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்