உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்போதைப் பொருளை இலங்கைக்குள் கடத்தி வந்த இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்ட போது ஒரு பெண்ணின் கைப்பையினுள் சூட்சுமமான முறையில் இந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட போதைப் பொருள் 212 கிராம் எடை கொண்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 31 வயதான இந்திய பெண் இன்று (12) மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.

சம்பவம் குறித்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்