உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்துபோராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக இன்றைய போராட்டம்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று இரவு உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் கத்தியுடன் நுழைந்த நபர்ஒருவர் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை தாக்க முற்பட்டு உள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து தப்பித்து உறவுகள் கூடாரத்தை விட்டு வெளியேறிய வேளை, அந்நபர்அங்கிருந்த கதிரையினை கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர்.

பின்னர் அங்கிருந்த சமையல் பத்திரங்களையும் சேதப்படுத்தி உறவுகளால் ‘ இன்று 400 ஆவதுநாள் ‘ என எழுதி தொங்க விடப்பட்ட பதாகையையும் சேதப்படுத்தி உள்ளார். இந்நிலையில்
அவ்விடத்தில் மக்கள் கூடி தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற வேளை அவ்விடத்தில்இருந்து தாக்குதலாளி தப்பி ஓட முயன்றுள்ளார்.

இருந்த போதிலும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் வீதி சோதனை நடவடிக்கையில்ஈடுபட்டு இருந்த பொலிஸாரின் உதவியுடன் தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துசென்ற பொலிஸார் அவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்