உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றுமுன்தினம் இரவு முதல் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டுவந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த தங்கவேல் ஜெயராஜ் (வயது 49) என்ற குடும்பஸ்தரே மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவிக்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடும்பஸ்தர் வாகன சாரதியாக தொழில் புரிபவரெனவும் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்