உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


லிபிய அரசுக்கெதிரான கிளர்ச்சியை அடக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு இராணுவத்தினர் பீ.பீ.சி யின் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் தற்போதைக்கு லிபிய இராணுவத்தின் காவலில் இருப்பதாகவும் அறியப்படுகின்றது. இராணுவத் தாக்குதல் காரணமாக ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து சுயாதீன தகவல்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லிபியாவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு வெளிநாட்டு சக்திகள் மற்றும் ஊடகங்கங்களே காரணம் என்ற கருத்துப்பட கடாபி கண்டனம் தெரிவித்த பின்பே ஊடகங்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரம் லிபியாவின் கிளர்ச்சித் தலைவர் முஸ்தபா ஜெலீல் என்பவரைக் கைது செய்து தன்னிடம் ஒப்படைப்பவர்களுக்கு நான்கு இலட்சத்துக்கும் அதிகமான டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்றும் கடாபி அறிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்