உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பாலஸ்தீனை சேர்ந்தவரும் ஹமாஸ் போராளிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவில் உறுப்பினராக இருந்த ஃபாதி அல்-பட்ஷ் கடந்த சில ஆண்டுகளாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வருகிறார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்த அவரை இரண்டு பேர் கொண்ட குழு சுட்டுக்கொன்றுள்ளது.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகிலுள்ள சாலையில் சென்று கொண்டிருந்த அல்-பட்ஷை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொலையான அல்-பட்ஷ் வருவதற்காக சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக கொலையாளிகள் அங்கு காத்திருந்தது சி.சி.டி.வி.யில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பின்னணியில் இயங்கியுள்ளது என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்பு இந்த கொலையில் தொடர்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால், மொசாட் மீதான சந்தேகப்பார்வை அதிகரித்துள்ளது.

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய புள்ளிகளை கடந்த காலங்களில் மொசாட் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், அல்-பட்ஷ் கொலை தொடர்பாக இஸ்ரேல் கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்