உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக் இணையதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எஸ்.வி.சேகர் மீது வழக்குபதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டைரக்டர் பாரதிராஜா, எஸ்.வி.சேகருக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.

நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் வைத்து பேட்டி அளித்த பாரதிராஜாவிடம் எஸ்.வி.சேகரின் அவதூறு கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் எனது வீட்டு நாய் குட்டிகளை கூட நான் பெயர் சொல்லித்தான் அழைப்பேன்.

ஆனால் எனக்கு உடன்பாடு இல்லாதவர்களின் பெயரை கூட நான் உச்சரிக்க விரும்பு வதில்லை என்று காட்டமாக தெரிவித்தார்.இதற்கிடையே பாரதிராஜா, நேற்று மீண்டும் எஸ்.வி.சேகர் மீது சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

பத்திரிகையாளர்கள் பற்றி, குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் கூறியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இதற்கு அறைக்குள் இருந்து கொண்டு வருத்தம் தெரிவித்தால் போதுமா? எஸ்.வி.சேகர் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்துக்கு செல்ல வேண்டும். அங்கு அனைத்து பத்திரிகையாளர்களும் வருவார்கள்.

அவர்களது காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும்.என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்