உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வெல்லாவ, பல்லேகொட்டுவ பகுதியில் நபரொருவர், தனது எட்டு மாதக் குழந்தையுடன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி பயணத்தை மேற்கொண்ட புகையிரதத்திலேயே குறித்த நபர், தனது குழந்தையுடன் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்லேகொட்டுவ – வெல்லாவ பகுதியை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனைகள் இன்று (23) இடம்பெறவுள்ளதுடன் வெல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்