உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கொண்டைக்கடலை புதினா சாதம்

தேவையான பொருட்கள் :

அரிசி – 1 கப்,
கடலை – ½ கப்,
தக்காளி – 1
வெங்காயம் – 1,
ப.மிளகாய் – 5
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள்- அரை டீஸ்பூன்,
புதினா இலைகள் – 1 கைப்பிடி,
எலுமிச்சைச் சாறு – ½ டீஸ்பூன்,
எண்ணெய், நெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

கொண்டைக்கடலை, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.தக்காளி, வெங்காயம், புதினாவை நறுக்கிக்கொள்ளவும்.கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும். சட்டியை அடுப்பில் வைத்து, சூடானதும் எண்ணெய்,நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.அடுத்து அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். அரிசி அரை வேக்காடு வெந்தவுடன் அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, புதினா இலை, எலுமிச்சைச் சாறு, சேர்த்துக் கலக்கி அடுப்பை குறத்து நன்றாக வேக விடவும்.
கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி இறக்கவும். கொண்டைக்கடலை புதினா சாதம் ரெடி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்