தமிழில் எழுத
பிரிவுகள்


18 Responses to “எமது ஊர் காட்சிகள்”

 • இந்தப் படங்கள் மனதைக் கவர்கின்றது. அழகு வண்ணப்பூச்சுக்களுடன் கோவிலைக் காட்டி சனசமூக நிலைய உடைந்து போன இருக்கை தூர்ந்து போன கட்டிடம் இவை எமது ஊரின் அறித்தேடலையும் நம்பிக்கையின் மறு பக்கத்தையும் அறிய முடிகின்றது. அறிவுத் தேடல்?????

 • வாசகன்:

  பணிப்புலம் படங்களை பார்த்தேன்.துர்க்கா சிரிக்கிறா? (சனசமூகநிலைய) சரஸ்வதி அழுகிறா? இருவரும் சிரிக்கும் நிலை எப்போ? புலம்பெயர்ந்த அன்பான கருணையுள்ளம் படைத்த ஊருக்கு உதவும் கரங்களிடம் கையேந்தும் ஓர்அப்பாவியின் நப்பாசை.

 • Ratnarajah:

  நன்றிகள்!!!அன்பான உங்கள் சேவைக்கும் நன்றிகள்.

 • விசு.க.விமலன்.:

  மிக அழகாகவும், அவசியமான இடங்களையும், அதானிப்பிற்கு மக்களிடம் எடுத்துச் செல்லப்படவேண்டிய பகுதிகளையும் தேவைக்கேற்ப்பவும் ,
  காலத்திற்கே ற்ப்பவும் இவ் இணையத்தில் ஏற்றிய திருமதி. மோகன் அவர்களுக்கு நன்றிகள் பல.

 • சச்சி:

  பசுமையான நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி.

 • எமது ஊருக்கு எங்களை இலவசமாக அழைத்துச் சென்ற திருமதி மோகனராசா அவர்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.

 • sivajiny:

  Thanks mohan, because after 20 years I can see my village. Panipulam.net Keep doing good communicate with our villages.

 • அன்பின் மோகா, உன் மோகனைப்புன்னகை போல், மேலும் ஒரு முறை எம்மை ஊரில் நிறுத்தியிருக்கின்றாய். நன்றி, நண்பா….

 • Nagendram:

  சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?
  நமது ஊரை கண்முன்னே கொண்டு வந்த மோகன் அவர்களுக்கும்,
  மற்றும் பணிப்புலம்.நெற் இயக்குனர் அவர்களுக்கும் எனது
  மனமார்ந்நன்றிகள்.

 • T.SANKAR...palarmo:

  ஊருக்கு போக்க முடியாத பலருக்கும் நீண்ட காலமாகக் ஊரைப் பார்க்காத என்னையெல்லாம் ஊருக்கு அழைத்துச் சென்ற “திருமதி.மோகனராசவிர்க்கும் ,இந்தப் படங்களையெல்லாம் சிரமம் பாராது இணையத்தில் வழங்கிய இணைய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள். மேலும் வேறு ஊர்க் காட்சிகளை இருத்தல் மற்றும் நேர்யர்கள் போடவும்

 • ARUMUGASAMY:

  ஊர் பாடங்களை பார்பதற்கு மிகவும் மகிழ்சியக
  இருக்கின்றது.மிக்க நன்றிகள் மேலும்
  தொடரவும்.

 • T.BALA. pannipulam:

  மோகனுக்கும் அவரது பாரியாருக்கும் நன்றிகள்.சொன்னது மாதிரி இதை படப்பிடிப்பு செய்த உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.இதே போல் எமது ஊரவர் செல்லும் பொழுது உங்கள் புகைப்படகருவிக்குள் புகுத்தியதை எமது இணையத்துக்குள் புகுத்தினால் பலரின் கண்களுக்கு விருந்தளிக்கும்.இணையம் உங்களுடையதே எனவே வரும்காலங்களில் இவற்றை கவனத்தில் கொள்ளவும். பணிப்புலம் த.பாலா டென்மார்க்

 • நோர்வேயில் இருந்து ஊரவன்:

  ஆம், நோர்வே வாழ் நம்ம ஊர் சிறார்களே இதோ உங்களுக்கான காட்சிகள் கிடைத்து விட்டன. இதில் ஏதாவது ஒன்றை தெரிந்து உங்கள் வரைதல் திறைமைஐ ஊர் அறியச் செய்யுங்கள். இதை இந்த சந்தற்ப்பதில் வெளி விட்டவர்களுக்கு நன்றிகள் 🙂

  நோர்வேயில் இருந்து ஊரவன்

 • piratheepan Flensburg Germany:

  sehr gut
  மனதை கவரும் காட்சிகள்
  பாடலுடன் பார்க்கும்போது கண்ணீர் வரும்.
  வழங்கிய இணைய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள். Tusind tak

 • selvarajah:

  அம்பாள் துணை,
  நன்றிகள் பல, மோகா உன் பதிக்கு.
  மீண்டும் எம்மை ஊருக்கு அழைத்துச் சென்றமைக்காக.
  மனவருத்தம் ,1979 ஆம் ஆண்டு 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலையில் இன்று 100 மாணவர்கள் கூட இல்லைப்போல் தோன்றுகிறது.
  காரணம் என்ன? மக்கள் தொகை குறைந்து விட்டதா?
  அல்லது பாடசாலையின் தரம் குறைந்து விட்டதா?
  கிட்டத்தட்ட 50 ஆசிரியர்கள்,
  இப்போதும் கண்முன்னே,
  ஞாபகம் வருது, ஞாபகம் வருது. செல்லையா மாஸ்ரரும்,சின்னத்துரை மாஸ்ரரும் நாற்காலியில் இருந்து நித்திரை தூங்கினதும் ஞாபம் வருது.
  வீட்டுவேலை செய்யாதத்துக்கு பொன்னம்பல மாஸ்ரர் காதிலே நுள்ளிக் காதால இரத்தம் வந்ததும் ஞாபகம் வருது.
  இன்னும் பல ஞாபகங்கள் வருது,
  நன்றிகள் மீண்டும் மோகனின் பதிக்கும், இணையத்துக்கும்.
  நன்றியுடன்
  பணிப்புலத்து இராசன்.

  • அழ பகீரதன்:

   பொன்னம்பலம் மாஸ்ர‍ர் காதில நுள்ளினது இப்ப போல ஞாபகமிருக்கிது. ஆனால் அந்த பள்ளிக்கூட கட்டிடங்கள் தான் இப்ப இல்லையே. அந்த பசுமையான நினைவுகளிடையே தோய்ந்து போக நாங்கள் படித்த பள்ளிக்கூடகட்டிடங்கள் இல்லாமல் போனது பெரிய வேதனைதான். ஆனாலும் ஆறுதல் வேறுகட்டிடங்கள் புதிதாக எழும்பி மாணவர்கள் கற்றுக்கொண்டிருப்பது.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  மனதை கவரும் காட்சிகள். நன்றி இதை எமதோடு பகிர்ந்ததற்கு. படங்களை இதில் கொடுத்த பாடலோடு கேட்டு பார்க்கும்பொழுது மனதை உருக்கின்றது. குறிகிய காலம் ஊரில் வசித்த எனக்கே இப்படி என்றால், பெரியவர்களுக்கு – அதுவும் புலம்பெயர்ந்து என்னும் ஊர் திரும்பாத – இவற்றை இந்த பாடலுடன் பார்க்கும்போது கண்ணீர் வருவதும் ஆச்சர்யமில்லாததே… இப்படியானவை என்னும் தொடர்ந்து எம்மோடு பகிர்கலாம். நல்ல விடயம்.

 • Sivanantham.S:

  ஊர்க் காட்சிகளை மிகவும் சிறப்பாகத் தன் ஒளிப் படக் கருவியில்ப் புகுத்தி வந்து, நீண்ட காலமாகக் ஊரைப் பார்க்காத என்னையெல்லாம் ஊருக்கு அழைத்துச் சென்ற “திருமதி.மோகனராசவிர்க்கும் ,இந்தப் படங்களையெல்லாம் சிரமம் பாராது இணையத்தில் வழங்கிய இணைய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்