உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



2009-ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த `நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் `நாடோடிகள்-2′ உருவாகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார் – அஞ்சலி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

பரணி, அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – ஏகாம்பரம், கலை – ஜாக்கி, எடிட்டிங் – ரமேஷ், பாடலாசிரியர் – யுகபாரதி, சண்டைப்பயிற்சி – திலீப் சுப்புராயன், நடனம் – தினேஷ், ஜான், தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் – சமுத்திரக்கனி

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்