Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சென்னையின் கணத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா(45). இவர் கடந்த சனிக்கிழமை இரவு தூங்கும் போது செல்போனில் பாட்டுக்கொண்டிருந்தார். ஹெட்போனை காதிலிருந்து அகற்றாமலேயே தூங்கி விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை பாத்திமாவின் கணவர் அப்துல் கலாம் அவரை எழுப்பியுள்ளார். ஆனால் பாத்திமா விழிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்துல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பாத்திமாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் பாத்திமாவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பாத்திமா மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இரவில் தூங்கும் போது செல்போனில் பாட்டு கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்