உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்திருமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1000 மில்லிகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த இளைஞன் ஒருவனை நேற்று (08) மாலை சீனக்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீனக்குடா, சமன்புர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவனையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1000 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை வேறு ஒருவருக்கு வழங்குவதற்காக காத்துக்கொண்டிருந்த வேளையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்று (09) ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்