உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


50 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக டுபாய் நாட்டிலிருந்து எடுத்து வந்த பென்ணொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12.15 மணியளவில் டுபாயில் இருந்து ஶ்ரீலங்கன் விமானசேவையின் யூ.எல் 222 என்ற விமானத்தில் வருகை தந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருடைய பயணப்பையில் இருந்து 432 கிராமுடைய மாலை, வளையல், மோதிரம் மற்றும் இன்னும் பல தங்க ஆபரணங்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மீட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த பெண்ணையும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களையும் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்